மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பயிர்கள் சேதம்: வேளாண்மை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு + "||" + Causes of damage to kajah storm crops: Agricultural technology team study

கஜா புயலால் பயிர்கள் சேதம்: வேளாண்மை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

கஜா புயலால் பயிர்கள் சேதம்: வேளாண்மை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை தொழில் நுட்ப குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கக இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலசவுந்தரி, தோட்டக்கலைத்துறை ஆணையர் மூர்த்தி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய தலைவர் உமா ஆகியோரை கொண்ட வேளாண்மை தொழில் நுட்ப குழுவினர் வந்தனர். இந்த குழுவினர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவில்பத்து, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் புயலால் சேதமடைந்துள்ள பயிர்களின் விவரம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து கிராமம் வாரியாக கணக்கெடுத்து கணினியில் பதிவேற்றம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நாராயணசாமி, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு அமெரிக்காவில் நடந்த ‘ மொய் விருந்து’
கஜா புயல் நிவாரணத்துக்கு அமெரிக்காவில் மொய் விருந்து நடைபெற்றது.
2. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் வாழை சேதமடைந்ததால் இலைகள் அறுவடைபணி பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் வாழை சேதமடைந்ததால் இலைகள் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
3. கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி 75 ஆசிரியர்கள் பங்கேற்பு
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
4. கஜா புயலால் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் மனு
கஜா புயலால் விசைப்படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்க வேண்டும் என்று, அமைச்சர் ஜெயக்குமாரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
5. தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த வாழை, தென்னை மரங்களை வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பாதிப்பை எவ்வாறு சரி செய்வது என ஆய்வு மேற்கொண்டனர்.