மாவட்டத்தில், 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக் கிழமை) 7 இடங்களில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை களைவதற்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகாவிற்கு ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நாளை (சனிக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 7 தாலுகாக்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி தாலுகா பெரியசூலாமலை, ஊத்தங்கரை தாலுகா உப்பாரப்பட்டி, போச்சம்பள்ளி தாலுகா சந்தூர், பர்கூர் தாலுகா அங்கிநாயனப்பள்ளி, சூளகிரி தாலுகா அத்திமுகம், ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை தாலுகா நாகமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்று, தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story