மாவட்ட செய்திகள்

உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near the school New baby's suicide is a suicide

உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (வயது22). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் அம்பிகா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை கணவர் மூர்த்தி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்பிகா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அம்பிகாவை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜியும் விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
ஆறுமுகநேரியில் டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு
விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்து 6 நாளில் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
4. பரமக்குடியில் புறம்போக்கு இடத்தில் இருந்த வீடு இடிப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பரமக்குடியில் புறம்போக்கு இடத்தில் இருந்த வீட்டை அரசு அதிகாரிகள் இடித்தனர். இதனை கண்டித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை குழந்தை இல்லாத ஏக்கத்தில் சோக முடிவு
சாத்தான்குளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.