மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில்: கால்நடை சந்தைகளை 23-ந் தேதி வரை மூட வேண்டும் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு + "||" + Tirupur district: The livestock markets are closed till 23th - Collector KS.Palanisamy orders

திருப்பூர் மாவட்டத்தில்: கால்நடை சந்தைகளை 23-ந் தேதி வரை மூட வேண்டும் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில்: கால்நடை சந்தைகளை 23-ந் தேதி வரை மூட வேண்டும் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை சந்தைகளை வருகிற 23-ந் தேதி வரை மூட வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவிலான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப் பட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. அதில் 2 ஆயிரத்து 200 கால் நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கால்நடைகள் இறந்து விட்டன. கால்நடை மருத்து வக்குழுவினர் கோமாரி நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோமாரி நோய் மற்ற கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் மாவட் டத்தில் உள்ள கால்நடை சந்தைகளை கடந்த 2 வாரம் மூடுவதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தர விட்டார். இந்தநிலையில் தற்போது பருவமழை பெய்து வருவதாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் இருப்பதற்காக வருகிற 23-ந் தேதி வரை கால்நடை சந்தைகளை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கால்நடை தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சட்டம் 2009-ன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் கடந்த 2 வார காலம் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நோய் தாக்கம் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வருகிற 23-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள பசு, எருமை மாடு சந்தைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

எனவே கால்நடைகளை வாங்கவோ, விற்கவோ தடை செய்யப்படுகிறது. மேலும் நோய் தாக்கம் தொடர்பான தகவல் தெரிவிக்க கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரை 94453 95142 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்
திருப்பூரில் ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
2. 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்
திருப்பூரில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்.
3. திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள் - பொதுமக்களுக்கு , கலெக்டர் வேண்டுகோள்
திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா ரவுண்டானா அருகே நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக உணவு மற்றும் வணிக நிறுவனங்களை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் கூறியதாவது:-
5. அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை
அறுவை சிகிச்சை மூலமாக குறையை நீக்குவதற்காக 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை