மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு + "||" + Death of a fallen cable TV employee

பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு

பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு
பட்டுக்கோட்டையில், கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 45). இவர் தனியார் கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் ‘கஜா’ புயலினால் அறுந்து கிடந்த கேபிள் டி.வி. வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு உள்ள ஒரு கம்பத்தில் ஏறி, கேபிள் வயர்களை மாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திருநாவுக்கரசு தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் திருநாவுக்கரசை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் திருநாவுக்கரசுவின் மனைவி ராஜாத்தி (35) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புயலில் அறுந்து விழுந்த கேபிள் வயர்களை சீரமைத்த ஊழியர் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லியில் 2–வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
பூந்தமல்லியில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.
2. காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திதி கொடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் இறந்தன.
3. பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும், வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4. திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி அய்யப்ப பக்தர் பலி; தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி நாமக்கல்லை சேர்ந்த அய்யப்ப பக்தர் உயிரிழந்தார். தொடரும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. கைதி மர்ம சாவு: பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.