மாவட்ட செய்திகள்

புதுப்பேட்டை அருகே: என்ஜினீயர் திடீர் சாவு - போலீசார் விசாரணை + "||" + Near Pudukottai: Engineer's sudden death - police investigate

புதுப்பேட்டை அருகே: என்ஜினீயர் திடீர் சாவு - போலீசார் விசாரணை

புதுப்பேட்டை அருகே: என்ஜினீயர் திடீர் சாவு - போலீசார் விசாரணை
புதுப்பேட்டை அருகே என்ஜினீயர் திடீரென இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள கே.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் பார்த்தீபன்(வயது 26). என்ஜினீயர். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இவர், நாட்டு மருந்து கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பார்த்தீபன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அவர், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பார்த்தீபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார், மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு செய்து, பார்த்தீபன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...