நடிகர் அம்பரீசின் சொந்த ஊருக்கு சென்றார் மனைவி சுமலதா கோவிலில் சிறப்பு பூஜை; நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்


நடிகர் அம்பரீசின் சொந்த ஊருக்கு சென்றார் மனைவி சுமலதா கோவிலில் சிறப்பு பூஜை; நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 9 Dec 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

27-வது ஆண்டு திருமண நாளையொட்டி மறைந்த நடிகர் அம்பரீசின் சொந்த ஊருக்குஅவரது மனைவி சுமலதா, மகன் சென்றனர். அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்த அவர்கள் அம்பரீசின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு, 

27-வது ஆண்டு திருமண நாளையொட்டி மறைந்த நடிகர் அம்பரீசின் சொந்த ஊருக்குஅவரது மனைவி சுமலதா, மகன் சென்றனர். அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்த அவர்கள் அம்பரீசின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

27-வது ஆண்டு திருமண நாள்

கன்னட திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகர் அம்பரீஷ். இவர் கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான மண்டியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் நடிகர் அம்பரீசின் உடல் முழுஅரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் அம்பரீசுக்கும், நடிகையும், அவரது மனைவியுமான சுமலதாவுக்கும் திருமணம் ஆகி நேற்றுடன் 27-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி சுமலதா தனது மகன் அபிஷேக்குடன் அம்பரீசின் சொந்த ஊரான தொட்டரசினகெரே கிராமத்திற்கு சென்றார்.

கோவிலில் பூஜை

அங்குள்ள காலபைரேஸ்வரா கோவிலில் அவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் மாயம்மா தேவி கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்த சமயத்தில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் நடிகர் அம்பரீசின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

அம்பரீசின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி சுமலதாவும், மகன் அபிஷேக்கும் அவரது சொந்த ஊருக்கு சென்றது இதுவே முதல் முறையாகும். இதனால் கிராம மக்கள் அவர்களை கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் வரவேற்றதை காண முடிந்தது.

நினைவிடத்தில் அஞ்சலி

அதன் பின்னர் நடிகர் அம்பரீசின் சொந்த ஊர், மக்கள், தற்காலிகமாக மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவிடம் அமைத்துள்ளனர். அந்த இடத்திற்கு சென்ற சுமலதா, அபிஷேக் ஆகியோர் அங்கு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அம்பரீசின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story