மாவட்ட செய்திகள்

‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்குபா.ஜ.க. சார்பில் மேலும் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது + "||" + BJP More than Rs 1 crore relief materials

‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்குபா.ஜ.க. சார்பில் மேலும் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது

‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்குபா.ஜ.க. சார்பில் மேலும் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது
‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு கமலாலயத்தில் இருந்து மேலும் ரூ.1 கோடி மதிப்பில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக பா.ஜ.க. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க. சார்பில் இதுவரை ரூ.6 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து, நேற்று கமலாலயத்தில் இருந்து ரூ.1 கோடி மதிப்பில் சேலை, லுங்கி, போர்வை ஆகிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுப்பும் பொருட்களை மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். அப்போது, மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, மாநில செயலாளர் கரு.நாகராஜன், ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், இளைஞரணித் தலைவர் வினோஜ், பேராசிரியர் ராஜலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி மேலும் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...