தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது
தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.
திருச்சி,
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை யொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டணத்துடன் கூடிய ரெயில்களை இயக்க உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவில் செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்: 06063) வருகிற 24-ந் தேதி, 31-ந் தேதி மற்றும் ஜனவரி 14-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. தாம்பரத்தில் காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் நள்ளிரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந் தேதி, ஜனவரி 13-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாலை 5.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06064) மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 டயர் ஏ.சி.பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-13 மற்றும் 3 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக திருநெல்வேலி செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06061) வருகிற 28-ந் தேதி மற்றும் ஜனவரி 4-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.
இதேபோல் திருநெல்வேலியில் இருந்து வருகிற 20-ந் தேதி, 27-ந் தேதி மற்றும் ஜனவரி 3-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய 4 நாட்கள் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்: 06062) மறுநாள் காலை 10.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 டயர் ஏ.சி. பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-9 மற்றும் 6 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்: 06067) வருகிற 20-ந் தேதி, 22-ந் தேதி, 25-ந் தேதி, 27-ந் தேதி, 29-ந் தேதி மற்றும் ஜனவரி 1, 3, 5, 8, 10, 12, 15, 17 மற்றும் 19-ந் தேதி ஆகிய நாட்களில் புறப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.55 மணிக்கு கோவையை சென்றடைகிறது.
கோவையில் இருந்து வருகிற 19, 21, 24, 26, 28 மற்றும் 31-ந் தேதியும், ஜனவரி 2, 4, 7, 9, 11, 14, 16, 18-ந் தேதி ஆகிய நாட்கள் இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06068) மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-2 மற்றும் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதுதவிர நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சுவேதா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வண்டி எண்: 82646) நாகர்கோவிலில் வருகிற 30-ந் தேதி மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(31-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் 2 டயர் ஏ.சி. பெட்டி-1, 3 டயர் ஏ.சி.பெட்டி-3, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி-13 மற்றும் 3 பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story