பெங்களூருவில் தனியார் நிறுவனங்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கி ரூ.2.69 கோடி ‘அபேஸ்’


பெங்களூருவில் தனியார் நிறுவனங்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கி ரூ.2.69 கோடி ‘அபேஸ்’
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 10:18 PM GMT)

பெங்களூரு அல்சூரில் தனியாருக்கு சொந்தமான எலெக்ட்ரீக்கல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தென்கொரியா நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரீக்கல் உபகரணங்களை வாங்கி விற்பனை செய்து வந்தது.

பெங்களூரு,

பண பரிமாற்றம் உள்ளிட்ட தகவல்களை இ-மெயில் மூலமாக 2 நிறுவனமும் செய்து வந்திருந்தனர். இந்த நிலையில், 2 நிறுவனங்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கிய மர்மநபர்கள், அந்த நிறுவனங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2.69 கோடியை ‘அபேஸ்’ செய்திருந்தார்கள்.

அதாவது ரூ.2.69 கோடியை நிறுவனங்களின் பெயரிலான வங்கி கணக்குகளில் இருந்து மர்மநபர்கள் தங்கள் வங்கி கணக்கு மாற்றி பணத்தை சுருட்டி இருந்தனர். இதுபற்றி அறிந்த 2 நிறுவனங்களின் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அல்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் அதிகாரி ரமேஷ் ராமசந்திரன், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story