சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசால் உயர்த்தப்பட்ட குடிநீர் வரி, வீட்டுவரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டிப்பது, உயர்த்தப்பட்ட வரிகளை உடனே ரத்து செய்ய வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், அம்சாகுளம் தாலுகா அலுவலகம் முன்பு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். பெரியசாமி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story