மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 262 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் பிரபாகர் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 262 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

எக்கூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 262 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

ஊத்தங்கரை, 

ஊத்தங்கரை தாலுகா எக்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. உதவி கலெக்டர் சரவணன் வரவேற்றார். தாசில்தார் மாரிமுத்து திட்ட விளக்கவுரையாற்றினார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு 262 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சத்து 48 ஆயிரத்து 125 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்களிடம் பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வீட்டு மனை பட்டா, விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், பள்ளி சுற்று சுவர், குடிநீர் வசதி, ஏரி கால்வாய் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளர்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், தாட்கோ மேலாளர் (பொறுப்பு) ராஜகுரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடி, சண்முகம், தனி தாசில்தார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள்தொடர்பு அலுவலர் சேகர் நன்றி கூறினார்.

Next Story