கிருஷ்ணகிரியில் மின் தடை நீக்க புகார் பதிவு மையம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் மின் தடை நீக்க புகார் பதிவு மையத்தை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கணினி மயமாக்கப்பட்ட மின் தடை பழுது நீக்கும் புகார் பதிவு மையம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், தமிழ்நாடு மின் பகிர்மான வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அப்துல் ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக இளைஞர்் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு பதிவு மையத்தை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து அமைச்சர், பொதுமக்களிடம் மின் பழுது தொடர்பாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், செயற்பொறியாளர்கள்் வளர்மதி, நிரஞ்சரா, குமார், வேல், முத்துசாமி, முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் எம்.பி. பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி பகிர்மான வட்டமானது கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி ஆகிய 3 கோட்டங்களில் உள்ள 12 உட்கோட்டங்களும், 61 பிரிவு அலுவலகங்களும் அடங்கியதாகும். கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 5 ஆயிரத்து 942-க்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.
இதில், வீட்டு மின் இணைப்புகள் மட்டும் 5 லட்சத்து ஆயிரத்து 541 ஆகும். அனைத்து மின் பயனீட்டாளர்களும் பயன் பெறும் வகையில் 24 மணி நேரமும், செயல்படும் மின் தடை நீக்க கணினி மையத்திற்கு கட்டணமில்லா தொலைபேசியில் 1912, 18004250164, 04343 226422 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவ்வாறு மின் தடை நீக்க புகார்களை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை சரி செய்து கொடுக்கப்படும். மின் பயனீட்டாளர்கள் மேற்கண்ட சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story