விழுப்புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Dec 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சக்கரபாணி எம்.எல்.ஏ., நகராட்சி மண்டல இயக்குனர் விஜயகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் லட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேரணியை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

பேரணியை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயன்படுத்தும் மாற்றுப்பொருட்கள் குறித்த கண்காட்சியை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதில் நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் ராஜா, ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், ஊராட்சி செயலாளர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் வக்கீல் செந்தில், மருதூர் ரகுபதி, புஷ்பலதாகோதண்டராமன், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story