வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது


வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2019 3:45 AM IST (Updated: 6 Jan 2019 9:52 PM IST)
t-max-icont-min-icon

வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சின்ன நாகபூண்டி தரை பாலத்தின் கீழே கடந்த மாதம் 28-ந் தேதி தலை நசுங்கிய நிலை யில் ஆண் பிணம் கிடந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்தவர் சோளிங்கர் குளக்கரை மேடு பகுதியை சேர்ந்த சுண்டல் வியாபாரி ரவி (வயது 41) என்பது தெரியவந்தது.

ரவியை கொலை செய்தது அவரது நண்பரான வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா பெருங்காஞ்சி காலனியை சேர்ந்த மோகன் (34) என்பது தெரியவந்தது.

போலீசார் மோகனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆர்.கே.பேட்டையை அடுத்த கோளேரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மோகனை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.

இதில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு ரவியுடன் சின்ன நாகபூண்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததும் அதன்பிறகு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவியின் தலையில் பாறாங்கல் போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

Next Story