ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.57 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கட்டிட மேஸ்திரி


ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.57 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கட்டிட மேஸ்திரி
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.57 ஆயிரத்தை கட்டிட மேஸ்திரி போலீசில் ஒப்படைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார். தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர் தர்மபுரி ரெயில்நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் நேற்று ரூ.57 ஆயிரம் எடுத்தார். அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மீது வைத்துவிட்டு செல்போனில் பேசியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் நியூ காலனியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தமிழ்ச்செல்வன் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மீது கேட்பாரற்று இருந்த ரூ.57 ஆயிரத்தை எடுத்து அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பத்குமார் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த விவரங்களை கூறி பணத்தை பெற்று கொண்டார். ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை நேர்மையுடன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த கட்டிட மேஸ்திரி தமிழ்ச்செல்வனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், போலீசார் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Next Story