மாவட்ட செய்திகள்

பள்ளி வேன் மீது மொபட் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம் + "||" + Mobit Confrontation on School Van: Engineer's College student student wounded

பள்ளி வேன் மீது மொபட் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்

பள்ளி வேன் மீது மொபட் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்
சமயபுரத்தில் பள்ளி வேன் மீது மொபட் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
சமயபுரம்,

திருச்சி துவாக்குடிமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நவீன்குமார்(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் நந்தகுமார் (19) என்பவரும் நண்பர்கள். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தனர்.


2 பேரும் திருச்சியிலிருந்து கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை பஸ்சை தவற விட்டதால் மொபட்டில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நவீன்குமார் மொபட்டை ஓட்ட பின்னால் நந்தகுமார் அமர்ந்திருந்தார்.

சாவு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பழைய பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற பள்ளி வேன் மீது எதிர் பாராத விதமாக மொபட் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமார் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் லால்குடி அருகே உள்ள நரிமேடு கோவில் தெருவை சேர்ந்த தெய்வநாதன் என்பவர் மகன் லியோ (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிளேடால் கழுத்தை அறுத்ததுடன் லேத் பட்டறை அதிபர் தூக்கு போட்டு சாவு; காதல் தோல்வி காரணமா?
வில்லியனூர் அருகே லேத் பட்டறை அதிபர் கழுத்தை அறுத்துக்கொண்டும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. ஆப்கானிஸ்தானில் தொடர் வான்தாக்குதல்: தலீபான் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தொடர் வான்தாக்குதல்களில் தலீபான் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. போயிங் விமான விபத்தில் கணவர் பலி: ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது.
4. அரியமங்கலத்தில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
அரியமங்கலத்தில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
5. மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து : 13 பேர் உடல் நசுங்கி பலி
மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் டெம்போ வேன் மீது லாரி கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியானார்கள்.