மாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
மாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
மைசூரு,
மைசூரு மாவட்டத்தில் உள்ள தாலுகாக்கள், மைசூரு நகரில் உள்ள தனியார் மையங்கள் உள்பட உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாச்சாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விபுல்குமார், தாசில்தார்கள், தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புகார் கொடுக்கலாம்
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் அதிகாரி சீனிவாச்சாரி கூறியதாவது:-
மாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏதாவது குறைகள், பாதிப்புகள் இருந்தால் அதுபற்றி அந்த மையங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், தே்ாதல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். இதுபற்றி புகார் கொடுக்கலாம். தேர்தல் நடத்த தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story