மாவட்ட செய்திகள்

கவிழ வேண்டிய அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி முட்டு கொடுக்கிறார் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + ADMK Regime Modi gives a prop MK Stalin speech

கவிழ வேண்டிய அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி முட்டு கொடுக்கிறார் மு.க.ஸ்டாலின் பேச்சு

கவிழ வேண்டிய அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி முட்டு கொடுக்கிறார் மு.க.ஸ்டாலின் பேச்சு
கவிழ வேண்டிய அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி முட்டு கொடுக்கிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். பஸ் வசதி, சாலை வசதி, மயான பூமி அமைத்து தரக்கோரியும், மகளிர்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு அமைத்து தரக்கோரியும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அமைத்து தரக்கோரியும் கோரிக்கை வைத்தனர்.


பின்னர் பொதுமக்களிடையே ஸ்டாலின் பேசியதாவது:-
கவிழ வேண்டிய அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி முட்டு கொடுத்து நிறுத்தி வைத்துள்ளார். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி மதவெறி பிடித்த ஆட்சி.

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து ஓட்டு போடாமல் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.