மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்தலாரி நிறுவன மேலாளர் தற்கொலைமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி + "||" + Love made love Larry Corporate Manager suicide Frustrated by his wife's departure

காதல் திருமணம் செய்தலாரி நிறுவன மேலாளர் தற்கொலைமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி

காதல் திருமணம் செய்தலாரி நிறுவன மேலாளர் தற்கொலைமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி
நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த லாரி நிறுவன மேலாளர், மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல், 

நாமக்கல் அய்யம்பாளையம் எஸ்.பி.கே. நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 32). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி அணியாபுரம் அருகே உள்ள தோளூரை சேர்ந்த பிரியா (25) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான 6 மாதத்தில் பிரியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டுக்கு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து மூர்த்தி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால் பிரியா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மூர்த்தி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை தின்று விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது அண்ணன் சிலம்பரசன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அறைகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு: மதுரை சிறையில் கைதிகள் - போலீசார் மோதல், கல்வீச்சு- தற்கொலை மிரட்டலால் பரபரப்பு
கைதிகள் அறைகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டன. கைதிகளின் தற்கொலை மிரட்டலாலும் பரபரப்பு உருவானது.
2. வாட்ஸ்-அப்பில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டல்: பயத்தில் தீக்குளித்து 10-ம் வகுப்பு மாணவி சாவு, வாலிபர் கைது
வாட்ஸ்-அப்பில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக வாலிபர் ஒருவர் மிரட்டியதால் பயத்தில் தீக்குளித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. திருவக்கரை அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்
காதல் தோல்வியால் வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
4. கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
பல்லடத்தில் கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. திருப்பரங்குன்றம் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி பெயிண்டர் தற்கொலை மிரட்டல்
திருப்பரங்குன்றம் அருகே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.