பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு ‘புகையில்லா போகி’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு ‘புகையில்லா போகி’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 7:23 PM GMT)

சென்னை மாநகராட்சி சார்பில் ‘புகையில்லா போகி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் போகி பண்டிகையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 1,500 மாணவிகளுக்கு ‘புகையில்லா போகி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் போகி பண்டிகையின் போது எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். போகி பண்டிகையின் போது ரப்பர் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவிகள் புகையில்லா போகி மற்றும் பிளாஸ்டிக் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். பின்னர் மாநகராட்சி சார்பில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Next Story