மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுகாப்பு கட்டும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு + "||" + For the Pongal festival Exciting sales of flowers for backup construction

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுகாப்பு கட்டும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டுகாப்பு கட்டும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்பு கட்டும் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாமக்கல், 

தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று (திங்கட் கிழமை) போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) சூரிய பொங்கல் விழாவும், நாளை மறுநாள் (புதன்கிழமை) மாட்டுப்பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது. வருகிற 17-ந்தேதி (வியாழக் கிழமை) காணும் பொங்கல் விழா கொண்டாடப்படு கிறது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் மற்றும் போகி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் காப்பு கட்டுவதற்கு தேவையான பூக்கள் மற்றும் வேப்பிலை விற்பனை ஆங்காங்கே சாலையோரங்களில் விறு விறுப்பாக நடைபெற்றது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதேபோல் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் விற்பனையும் நேற்றே தொடங்கி விட்டது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

இதேபோன்று ராசிபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு கட்டப்படும் கயிறுகள், வர்ணம் உள்ளிட்ட பொருட்கள் சாலையோரம் விற்பனைக்காக வைத்திருந்தனர். இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...