மாவட்ட செய்திகள்

காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள் + "||" + 2nd day People concentrated in the science center

காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
பொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

நெல்லை,

பொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு குடும்பத்தோடு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். 

இதனால் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாபநாசம் காரையாறு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதி, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, குற்றாலம், அடவிநயினார் அணை பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள மக்கள் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் அறிவியல் மையத்தில் குவிந்தனர். 2–வது நாளான நேற்று அறிவியல் மையத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொதுமக்கள் அறிவியல் மையத்தில் குவிந்ததையொட்டி அண்ணா சாலையில் பஸ்கள், வாகனங்கள் செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புத்தாநத்தம் அருகே மரக்கிளைகளை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியல்
புத்தாநத்தம் அருகே மரக்கிளைகளை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
2. பராமரிப்பு பணி காரணமாக பசுபதிபாளையம் ரெயில்வே கேட் மூடல் பொதுமக்கள் அவதி
பராமரிப்பு பணி காரணமாக பசுபதிபாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
3. குடிபோதையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபர் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் குடிபோதையில் மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
4. நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
குறைவான நாள் வேலை பார்த்த மக்கள் முறையாக வேலை வழங்கவேண்டும் என கூறி நேற்று காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
5. கறம்பக்குடி அருகே சாலை போடும் பணி தாமதம் பக்தர்கள், பொதுமக்கள் அவதி
கறம்பக்குடி அருகே சாலை போடும் பணி தாமதமாவதால் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.