விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருசாபிஷேக விழாதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டது.
காலையில் சுவாமி, அம்பாள், சண்முகர் விமானங்களுக்கும், தொடர்ந்து மூலவர் சுவாமி–அம்பாள், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி–அம்பாள் வீதி உலாமதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து சுவாமி–அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் பகவதி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர் விசுவகர்ம சமுதாயத்தினர் செய்து இருந்தனர்.