பனை ஓலை பொருட்கள் வினியோகம்
கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர், கீழக்கரை பொதுமக்களுக்கு பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட முறைப்படி பனை ஓலை பட்டைகளை அறிமுகப்படுத்தினர்.
கீழக்கரை,
தமிழகத்தில் கடந்த 1–ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கீழக்கரையில் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்காமல் மக்களுக்கு பயன்தரும் வகையில் துணி பைகள், பனை ஓலையால் செய்யப்பட்ட கூடைகளை உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, கீழக்கரை பழைய மீன் கடையில் பொதுமக்களுக்கு பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட முறைப்படி பனை ஓலை பட்டைகளை அறிமுகப்படுத்தினர். கருணை சுய உதவிக்குழுவினர் தயார் செய்த பனை ஓலை பட்டைகளை மக்கள் குழு நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பனை ஓலை பொருட்களை வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story