என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்


என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2019 3:15 AM IST (Updated: 26 Jan 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கம்மாபுரம், 

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்களை கையகப்படுத்தும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்கு மேற்கண்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கரி சுரங்கத்துக்கு ஒருபிடி மண்ணை கூட தரமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மேலும், இது குறித்து ஊரின் முக்கிய இடங் களில் ‘கோ பேக் என்.எல்.சி.’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தினமான நேற்று மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் என்.எல்.சி. 3-வது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டிமேடு, தர்மநல்லூர் ஆகிய 4 கிராமங்களில் நேற்று வீடுகளில் கிராம மக்கள் என்.எல்.சி. 3-வது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story