உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு


உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 27 Jan 2019 10:45 PM GMT (Updated: 27 Jan 2019 8:01 PM GMT)

உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாதாகோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதன்வழியாக அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா.பழூர், திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுகோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காளைகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கநாணயம், கட்டில், பீரோ, வேட்டி, சைக்கிள், மிக்சி உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். உடையார்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story