புகழ்பெற்ற காலா கோடா திருவிழா இன்று தொடங்குகிறது
புகழ்பெற்ற காலா கோடா திருவிழா இன்று தொடங்குகிறது.
மும்பை,
மும்பை சர்ச்கேட் காலா கோடா பகுதியில் ஆண்டு தோறும் காலா கோடா கலை திருவிழா நடைபெறும். புகழ் பெற்ற இந்த திருவிழாவை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு காலாகோடா திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. விழாவையொட்டி இன்று முதல் 10-ந்தேதி வரை காலை முதல் இரவு வரை காலாகோடா பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, வித்தியாசமான படைப்புகளின் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுதவிர நகைச்சுவை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்காக தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அவர்களுக்கு என தனியாக இலக்கிய கருத்தரங்குகளும் நடக்கிறது.
ஆவணப்படங்கள்
சினிமா ரசிகர்களுக்காக இன்று மாலை 3.30 மணிக்கு ‘மாம்’ என்ற இந்தி ஆவணப்படமும், 6 மணிக்கு ‘ஹமீத்’ என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகிறது. இதேபோல திருவிழா நடைபெறும் எல்லா நாட்களும் இந்தி, ஆங்கிலம், மலையாளம், பெங்காலி என பல்வேறு மொழி ஆவணப்படங்கள் திரையிடப்படுகிறது.
மேலும் பல்வேறு தரப்பினர் மற்றும் பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
இதுதவிர பலவிதமான உணவு பொருட்கள், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story