நுகர்வோர் தின விழா: பேச்சு–கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்


நுகர்வோர் தின விழா: பேச்சு–கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-02T20:11:12+05:30)

நாகர்கோவிலில் நடந்த நுகர்வோர் தினவிழாவில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பரிசு வழங்கினார்.

நாகர்கோவில்,

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) அபுல்காசிம் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் தாமஸ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரன், முன்னாள் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற உறுப்பினர் சகிலாகுமாரி, குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பொதுச்செயலாளர் சிதம்பரம் ஆகியோர் பேசினர்.

விழாவில் பேச்சு போட்டியில் மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவி அபிதாரோஸ் முதல் பரிசும், திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி பாத்திமா அஸ்ரின் 2–வது பரிசும், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி லிவினா, முளகுமூடு குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி ஆக்ஸிமா, வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவன் அபிலாஷ் கண்ணன், அழகப்பபுரம் புனித ஆன்டனீஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவி ஞானசவுமியா ஆகியோர் 3–வது பரிசு பெற்றனர்.

கட்டுரை போட்டியில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10–ம் வகுப்பு மாணவி ஆன்ஸ்லின் சாய்னா முதல் பரிசும், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி மினி கிளாடிஸ் 2–வது பரிசும், மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்–2 மாணவி மாரி மகேஸ்வரி, நாகர்கோவில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவன் மகேஷ் ஆகியோர் 3–வது பரிசும் பெற்றனர்.

ஓவிய போட்டியில் நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி சபீனா முதல் பரிசும், நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவன் சுஜின் 2–வது பரிசும், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி ஜார்ஷிலின், நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவி மேரி பெனிஷா, மணலிக்கரை புனித மரியகொரட்டி மேல்நிலைப்பள்ளி 9–ம் வகுப்பு மாணவன் அஜய் ஆகியோர் 3–வது பரிசும் பெற்றனர்.

Next Story