வேதாரண்யம் அருகே கிணறு உள்வாங்கியதால் கிராம மக்கள் பீதி


வேதாரண்யம் அருகே கிணறு உள்வாங்கியதால் கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2 Feb 2019 7:17 PM GMT)

வேதாரண்யம் அருகே கிணறு உள்வாங்கியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் 1-வது சேத்தி பெரியக்குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது35). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 10 அடி அகலம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை சுற்றி செங்கலால் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த சுவர் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது.

அதைத்தொடர்ந்து கிணறு உள்வாங்கியது. கிணறு ஒன்று திடீரென உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி பகுதியில் கிணறுகள் உள்வாங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி பழையகரம் பகுதியில் காத்தமுத்து என்பவருடைய வீட்டு தோட்டத்தில் உள்ள கிணறு உள்வாங்கியது.

இதேபோல பலருடைய கிணறுகள் உள்வாங்கி உள்ளன. எதற்காக கிணறுகள் உள்வாங்குகின்றன என்பது பற்றி தெரியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story