அன்னா ஹசாரேக்கு வாழ்த்து கூறுவதா? பிரதமருக்கு சிவசேனா கண்டனம்


அன்னா ஹசாரேக்கு வாழ்த்து கூறுவதா? பிரதமருக்கு சிவசேனா கண்டனம்
x
தினத்தந்தி 4 Feb 2019 9:36 PM GMT (Updated: 4 Feb 2019 9:36 PM GMT)

உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறுவதா? என்று சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அன்னா ஹசாரே பிடிவாதம் பிடிப்பதாகவும், வளைந்து கொடுக்காமல் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறார். தன்னலம் இன்றி மக்களுக்கு உழைப்பவர்களின் குணாதிசயம் அப்படி தான் இருக்கும். இதேபோன்ற பண்புகள் பிரதமர் மோடியிடமும் உள்ளது. ஆனால் அதை பெருமையாக சித்தரித்துக்கொள்கிறார்கள்.

முதலில் நீங்கள் அன்னா ஹசாரேயின் உயிரை காப்பாற்றுங்கள். பின்னர் நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து கொள்ளலாம்.

அப்படி இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரேயை உயிரிழக்க அரசு அனுமதித்துவிட்டால், மாநிலத்தின் கலாசாரம் சீர்கெட்டுவிட்டதற்கான அறிகுறியாக அது மாறிவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அன்னா ஹசாரே அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில் கடிதத்தில், “உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி, நல்வாழ்த்துகள்” என்று கூறப்பட்டு இருந்தது. இதை அன்னா ஹசாரேயின் உதவியாளர்கள் வெளியிட்டனர்.

இதுகுறித்து சாம்னாவில், “விவசாயிகளுக்காகவும், ஊழலை எதிர்த்தும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து உயிரிழக்க பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்?” என சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.


Next Story