புதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


புதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம்  9 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Feb 2019 9:30 PM GMT (Updated: 9 Feb 2019 1:57 PM GMT)

புதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி, 

புதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பள்ளிக்கூட ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பாரதிநகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி மோகனா (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மோகன் மதுரையில் சுகாதாரத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மோகனா முடிவைத்தானேந்தல் அருகே உள்ள சவலாப்பேரி அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

9 பவுன் நகை பறிப்பு

அவர் தனது வீட்டுக்கு அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மோகனா கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். ஆனால் பொதுமக்கள் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனையடுத்து மோகனா புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story