திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 12 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மாசிமக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் திக்பந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி வருகிற 17-ந் தேதி தேரோட்டமும், 19-ந் தேதி சமுத்திர தீர்த்தவாரியும், 24-ந் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. 

Next Story