ஸ்மார்ட் சூட்கேஸ்
இப்போது வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் பயணம் செய்வது பலருக்கும் அவசியமாகிவிட்டது.
விமான பயணிகளுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் சூட்கேஸ், லேப்டாப் பேக் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளது புளூஸ்மார்ட் நிறுவனம். இந்நிறுவனம் சூட்கேஸ்களில் இரண்டு மாடல்களை உருவாக்கியுள்ளது.
இதில் பெரிய அளவில் உள்ளதை கார்கோவில் அனுப்பலாம். மற்றொன்று கேபினில் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர லேப் டாப் பேக் மற்றும் பாஸ்போர்ட் வைக்கும் சிறிய பேக்கை உருவாக்கியுள்ளது. இவை அனைத்துமே ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி கொண்டவை. இதனால் இதன் இருப்பிடத்தை உங்கள் ஸ்மார்ட் போனிலேயே தெரிந்து கொள்ள முடியும். இவை அனைத்துமே டிஜிட்டல் லாக் கொண்டவை. அத்துடன் இதன் எடையையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதனால் கூடுதலான பொருள் இருப்பின் அதனை அகற்றிவிட்டு விமான நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவு எடையுள்ள பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்லலாம்.
இதில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், கேமரா போன்ற மின்னணு கருவிகளையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கான செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்துவிட்டால், உங்கள் சூட்கேஸ் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மூன்று வண்ணங்களில் அதாவது கருப்பு, கிரே, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 22 அங்குல சூட்கேஸின் விலை சுமார் ரூ.21,000.
Related Tags :
Next Story