வானவில் : பியூமாவின் நவீன ஷூ


வானவில் : பியூமாவின் நவீன ஷூ
x
தினத்தந்தி 13 Feb 2019 11:43 AM GMT (Updated: 13 Feb 2019 11:43 AM GMT)

விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பியூமா, நைக், அடிடாஸ் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த வாரம் நைக் நிறுவனம் அடாப்ட் எனும் ஹைடெக் ஷூவை அறிமுகப்படுத்தியதைப் பார்த்தோம். அதற்குப் போட்டியாக தற்போது பியூமா நிறுவனமும் புதிய ஷூவை அறிமுகம் செய்துள்ளது.

இதில் உள்ள தொழில்நுட்பம் காரணமாக இதற்கு லேஸ் தேவையில்லை. உங்கள் காலை இதில் உள்ள ஆட்டோமேடிக் லேஸ் தொழில்நுட்பம் கெட்டியாக பற்றிக் கொள்ளும். எப்.ஐ. என்று இதற்கு இந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. பிட் இன்டெலிஜன்ஸ் என்பதன் சுருக்கமே எப்.ஐ. என்பதாகும். ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஷூ, உங்களது செயல்பாடுகளை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும்.

காலை இறுக்கிப் பிடித்திருப்பதாக நீங்கள் கருதினால் உங்களிடம் உள்ள ஆப்பிள் வாட்ச் மூலம் கூட லேசின் இறுக்கத்தை தளர்த்த முடியும். மோட்டார் பேட்டரி மூலம் இது செயல்படுகிறது. பேட்டரியை எளிதில் மாற்ற முடியும். ரீசார்ஜ் வசதியும் உள்ளது. நைக்கி அடாப்டுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளதால் 20 டாலர் விலை குறைத்து சுமார் ரூ.25,000-க்கு விற்க திட்டமிட்டுள்ளது பியூமா.

Next Story