நாகர்கோவிலில் பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை


நாகர்கோவிலில் பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2019 3:45 AM IST (Updated: 14 Feb 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் சந்தியா (வயது 17), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த சந்தியா திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தியா நேற்று பரிதாபமாக இறந்தார்.

சந்தியா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story