மாவட்ட செய்திகள்

ஆரணி அருகேவிஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை + "||" + Near Arani The suicide of the police succumbs to poisoning

ஆரணி அருகேவிஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை

ஆரணி அருகேவிஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை
ஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி, 

ஆரணியை அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 50). இவர் போளூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கரண் (6), முகில் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

முனியன் கடந்த 18 நாட்களாக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார். மேலும் முனியனுடன் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் அனைவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். மனைவியும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இதனால் அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் நேற்று காலை கீழ்அய்யம்பேட்டை பகுதியில் உள்ள குளக்கரை அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி
திருவோணம் அருகே விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்றார். அவர் காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
3. போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
செங்குன்றம் அருகே, பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
5. போலீஸ் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.