ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:15 AM IST (Updated: 16 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குடவாசல்,

குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி மஞ்சுபாரதி (வயது 33). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஸ்கூட்டரில் வடகண்டம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், மஞ்சுபாரதி கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுபாரதி, திருடன், திருடன் என்று கத்தினார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து மஞ்சுபாரதி குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story