நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 7:31 PM GMT)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடி செலவில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடி செலவில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

சூரிய ஒளி மின் உற்பத்தி

நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடி செலவில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து, மின் உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.

பஸ் வசதி-ஏ.சி. அறை

முன்னதாக, பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் விஜிலா சத்யானந்த் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட நவீன ஏ.சி. வசதி கொண்ட பயணிகள் அறையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகத்தில் இருந்து நெல்லை சந்திப்பு, புதிய பஸ் நிலையம் வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு புதிதாக அரசு டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., விஜிலா சத்யானந்த் எம்.பி., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் இ.நடராஜன், ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, துறைத்தலைவர் ராஜசேகரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story