உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மாலை ஆராதனை திரளானவர்கள் பங்கேற்பு
உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மாலை ஆராதனை நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
திசையன்விளை,
உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மாலை ஆராதனை நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
அந்தோணியார் ஆலயம்
தென் தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க திருத்தலங்களில் நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயம் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றினார். திருவிழா தொடர்ந்து நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடந்தது. 11-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு புனித அந்தோணியார் உருவ சப்பர பவனி நடந்தது. நேற்று மாலை பெருவிழா மாலை ஆராதனையை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அந்தோணியாருக்கு உப்பு, மிளகு, மாலை, மெழுகுவர்த்தி ஆகியவற்றை நேர்ச்சை கடனாக செலுத்தினர்.
கூட்டு திருப்பலி
13-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெருவிழா கூட்டு திருப்பலியை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி, மாலையில் திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் தோமினிக் அருள்வளன், ஷபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு, பணிக்குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story