கோவை சரகத்தில் 98 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


கோவை சரகத்தில் 98 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 6:58 PM GMT)

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை சரகத்தில் 98 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஊரில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி கோவை சரகத்தில் மொத்தம் 98 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு:-

டி.தங்கராஜ் பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து கேத்தி போலீஸ் நிலையத்துக்கும், சி.அன்பு செல்வி கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஏ.நெப்போலியன் ஈரோடு மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்கும், டி.கண்ணன் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேரம்பாடி போலீஸ் நிலையத்துக்கும், ஆர்.சிவக்குமார் தாளவாடி போலீஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கும், எஸ்.வினோதினி ஈரோடு மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், யமுனாதேவி ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், ஜி.மணிவண்ணன் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஏ.நாகமணி ஈரோடு மாவட்டத்தில் இருந்து கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஜே.மணிவண்ணன் நீலகிரி மாவட்டம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவாலா போலீஸ் நிலையத்துக்கும், எஸ்.பாலசுப்பிரமணியம் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் இருந்து காரமடை போலீஸ் நிலையத்துக்கும், ஏ.சவுந்தர்ராஜன் தேவாலா போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மாவட்ட சீரியஸ் குற்றப்பிரிவுக்கும், பிரவீணா நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், என்.வேல்முருகன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கும், ஏ.தவமணி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், டி.முருகேசன் தாராபுரத்தில் இருந்து ஊட்டி நகர மத்தியபகுதி போலீஸ் நிலையத்துக்கும், டி.சரவணன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், எஸ்.முருகேசன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வால்பாறை போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்ட நக்சலைட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கட்ராமன், கோவை மாவட்ட நக்சலைட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், எம்.கனகசுந்தரம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஊட்டி புறநகர் பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆர்.சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கே.கமலக்கண்ணன் ஊட்டி நகர போலீஸ் நிலையத்தில் இருந்து புதுமந்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஏ.கே.தங்கபாண்டியன் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், வெற்றிவேல்முருகன் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மாவட்ட சீரியஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், வெற்றிவேல்ராஜன் நீலகிரி மாவட்டத்தில் இருந்து நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எம்.லட்சுமணன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சரவணன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மசினகுடி இன்ஸ்பெக்டராகவும், கே.வி.சதாசிவம் கோவை நகரில் இருந்து ஊட்டி நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், எம்.ரவிச்சந்திரன் கோவை நகர ஆயுதப்படையில் இருந்து குன்னூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கே.கோவிந்தராஜ் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோவை நகர இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏ.பாண்டியன் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோவை நகர போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் எல்.முரளி நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பி.சுப்பிரமணியன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சீனிவாசன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பொறுப்பு ஏற்கிறார்கள்.

இதுதவிர திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 98 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story