காரைக்கால் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் குறித்த செயல் விளக்கம்


காரைக்கால் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் குறித்த செயல் விளக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 9:05 PM GMT)

காரைக்காலில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் வாக்காளர் களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் செயல்படும் விதம் குறித்து, மாவட்ட தேர்தல்துறை நேரடி செயல் விளக்கம் அளித்து வருகிறது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் துறையினர் செயல் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
இது குறித்து, தேர்தல் துறை கண்காணிப்பாளர் புஷ்பநாதன் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் செயல்படும் விதம் குறித்து நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்துகொண்டு எந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் சந்தேகங்களை அறியலாம். காரைக்கால் மாவட்டத்தில் இந்த முகாம் வருகிற 22-ந் தேதி வரை பல இடங்களில் நடத்தப்படும். பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு செயல்பாடுகள் மீதான சந்தேகங்களை நேரில் வந்து தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story