வத்திராயிருப்பு தனி தாலுகாஆனது


வத்திராயிருப்பு தனி தாலுகாஆனது
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 10:51 PM GMT)

வத்திராயிருப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உதயமானது.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இருந்து பிரித்து தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா சட்டசபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நாள் விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வத்திராயிருப்பை தலைமையிடமாகக்கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி பல்வேறு நடைமுறை சிக்கலை கடந்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு புதியதாக தாலுகா உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இருந்த 23 வருவாய் கிராமங்களை பிரித்து வத்திராயிருப்பு தனி தாலுகா உருவாக்கப்பட்டது நேற்று மாலை அங்குள்ள யூனியன் அலுவலக கட்டிடத்தில் நடந்த விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தனி தாலுகாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலெக்டர் சிவஞானம், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா உள்பட பலர் பங்கேற்றனர். வத்திராயிருப்பின் முதல் தாசில்தாராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story