சேத்துப்பட்டு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


சேத்துப்பட்டு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 20 Feb 2019 9:45 PM GMT (Updated: 20 Feb 2019 2:12 PM GMT)

சேத்துப்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டு தாலுகா கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராயன் (வயது 34), இவருக்கும் கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த வேலுவின் மகள் சத்யா (22) என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது சத்யா தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் குடும்பத்தினர் 2 பேரையும் அழைத்து சமாதானம் செய்து வைப்பார்கள்.

இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி கனகராயனுக்கும், சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கனகராயன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சத்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story