மத்திய அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்


மத்திய அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 8:24 PM GMT)

மத்திய அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிதியளிப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசின் உதவித்தொகை ரூ. 6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை 2003-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வறுமைக்கோடு பட்டியல் அடிப்படையில் வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை மூலம் ஊராட்சிகள் முழுவதும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதால் கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள பலரது பெயர்கள் விடுபட்டுள்ளது.

மேலும் உண்மையான ஏழைகள் பெயர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளது. எனவே முறையாக கணக்கெடுப்பு செய்து விடுபட்டுள்ள குடும்பங்களின் பெயர்்களையும் இணைத்து அரசு அறிவித்துள்ள உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும். திருவாரூர்் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உளபட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story