100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணி
திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் பெரம்பூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மெஹந்தி மூலம் கைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், எனது ஓட்டு எனது உரிமை என எழுதி மக்களிடையே விழிப்புணர்வு செய்தனர். மேலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்திடும் கருவி, வாக்களிப்பது நமது கடமை என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம், சுவரொட்டி ஒட்டுதல் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story