நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.
மும்பை,
உத்தரபிரதேசத்தை அடுத்து, அதிக நாடாளுமன்ற தொகுதிகளை (48 தொகுதிகள்) கொண்டது மராட்டியம் தான். நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதா சிவசேனாவுடனும், காங்கிரஸ் தேசியவாத காங்கிரசுடனும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், காங்கிரசின் மெகா கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறாமல் இருக்கிறது.
அதே நேரத்தில் கூட்டணியை இறுதி செய்து விட்ட பா.ஜனதா, சிவசேனாவும் கூட இன்னும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
வேட்பாளர் பட்டியல்
இந்தநிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே சிவசேனா - பா.ஜனதா கூட்டணியின் இலக்கு. சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விட்டது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில், சிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story