மாவட்ட செய்திகள்

காரைக்குடி பஸ் நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல் விளக்கம் + "||" + Karaikudi bus station Electronic recording machine description

காரைக்குடி பஸ் நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல் விளக்கம்

காரைக்குடி பஸ் நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து செயல் விளக்கம்
காரைக்குடி பஸ் நிலையத்தில் வைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
காரைக்குடி,

அடுத்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். காரைக்குடி தாசில்தார் பாலாஜி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு வாக்கு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, தேர்தல் துணை தாசில்தார் சந்திரபோஸ், ஊராட்சி அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணன், தேர்தல் உதவியாளர் செல்வராஜ், காரைக்குடி கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.