மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி; மனைவி காயம் + "||" + In electrical pole Motorcycle clash Worker kills Wife injured

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி; மனைவி காயம்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி; மனைவி காயம்
சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார். அவருடைய மனைவி காயம் அடைந்தார்.
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரப்பேரியை சேர்ந்தவர் பிள்ளையார்சாமி (வயது 50) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஆவுடையம்மாள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்திற்கு சென்றுவிட்டு குலசேகரப்பேரிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

சங்கரன்கோவில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பிள்ளையார்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆவுடையம்மாள் லேசான காயம் அடைந்தார். அவர் தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிள்ளையார்சாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. சங்கரன்கோவில் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி மாணவர் படுகாயம்
சங்கரன்கோவில் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மாணவர் படுகாயம் அடைந்தார்.