தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல்


தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 March 2019 10:30 PM GMT (Updated: 15 March 2019 8:01 PM GMT)

தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க கோரி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாதாகோவிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு வரை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் ஹெல்மெட் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி முன்பு வாகன ஓட்டிகளுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், காவல்துறை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story